77 வருடங்களாக கவனிப்பாரற்று ஒளிர்ந்து கொண்டிருந்த மின்விளக்கு
அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள பிரபல உணவகம் ஒன்றைப் புதுப்பிக்கும் நடவடிக்கையின் போது, அதனுள் 77 வருட காலமாக நியோன் மின்விளக்கொன்று அணைக்கப்படாது எரிந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கிலிப்டன்ஸ் கபே ரெறியா என்ற இந்த உணவகத்தில் பெண்களுக்கான ஓய்வறையிலுள்ள தூசு படிந்த களஞ்சியசாலைச் சுவரின் பின் பகுதியில் மேற்படி விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்துள்ளது.
இந்த ஹோட்டலில் 1935ஆம் ஆண்டில் இந்த நியோன் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
மேற்படி மின் விளக்கானது கடந்த 77 ஆண்டு காலப் பகுதியில் மேற்படி உணவகத்தின் மின் கட்டணம் 17,000 அமெரிக்க டொலரால் மேலதிகமாக அதிகரிப்பதற்கு வழி செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. __


Paris Time



0 comments:
Post a Comment