நோயைக் குணமாக்கும் போர்வையில் 11 வயது சிறுமி மீது மந்திரவாதி வல்லுறவு
நோயைக் குணமாக்கும் போர்வையில் செயற்பட்ட மந்திரவாதியொருவர் 11 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று மஹியங்கண கிராத்திரு கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட சிறுமி, ஆபத்தான நிலையில் மஹியங்கண அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மஹியங்கணப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றினையடுத்து, விரைந்த பொலிஸார் 61 வயது நிரம்பிய மந்திரவாதியைக் கைது செய்துள்ளனர்.
சிறுமிக்கு ஏற்பட்டிருந்த நோய்க்கு மாந்திரிக முறையில் பரிகாரம் காண, சிறுமியின் பெற்றோர் மந்திரவாதியின் உதவியை நாடியிருந்தனர். இந் நிலையில் மந்திரவாதி, குணமாக்கும் போர்வையில் சிறுமியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.
அவ்வேளையிலேயே சிறுமி மீது வல்லுறவு இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மஹியங்கணப் பொலிஸார் மேற்படி சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைகள் நிறைவுற்ற பின்னர், மந்திரவாதி மஹியங்கண மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment