மாயன் காலத்து மண்டை ஓடு தரையில் விழுந்ததால் மனித குலத்திற்கு ஆபத்து வருமா?
ஜேர்மனியில் மாயன் காலத்து மண்டை ஓடு கீழே விழுந்ததால், அதன் நாடிப் பகுதி சிதறி விட்டது. இது உலக அழிவிற்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்குமோ என்ற அச்சம் பரவி வருகிறது.
ஜேர்மனியின் சேக்ஸனி மாநிலத்தின் கிளாவ்சாவ் என்ற சிறுநகரத்தில் உள்ள ஒரு பரிசோதனைக் கூடத்தில் Quauthemoc எனப்படும் மண்டை ஓடு வைக்கப்பட்டிருந்தது.
இந்த மண்டை ஓட்டை பத்திரிகையாளர் படம் எடுப்பதற்காக வெளியே எடுத்து வைத்தனர். அப்போது மேசையிலிருந்து உருண்டு விழுந்து அதன் நாடிப்பகுதி நொறுங்கியது. இதன் உரிமையாளாரான தாமஸ் ரிட்டர் இதனை கெட்ட சகுனமாகக் கருதவில்லை.
ரிட்டர் இது போன்ற மண்டை ஓடுகளை வைத்திருக்கும் மற்றவர்களோடு மாயரின் பண்டைய பண்பாட்டுக் களமான மெக்சிகோவில் ஒரு சந்திப்பு நடத்த விரும்புகிறார். இந்த ஆண்டின் கடைசி நாளில் இந்த மண்டையோடு மனிதக் குலத்திற்கு ஏதோ ரகசியம் சொல்ல விரும்புகிறது என்றார் ரிட்டர்.
இதுகுறித்து ரிட்டர் கூறுகையில், ஆக்க சக்திக்கும் அழிவு சக்திக்கும் உரிய இறுதி போராட்டத்தைத் தடுக்கும் ஆற்றலை இந்த மண்டை ஓடு இழந்து விட்டதாகக் கருத இயலாது.
ஏனெனில் வேறு சில மண்டை ஓடுகளும் இவ்வாறு சிதைவுகளுக்கு ஆளானது உண்டு. அதனால் எந்தப் பின்விளைவும் ஏற்பட்டதில்லை என்று தெரிவித்தார்.
இந்த மண்டையோடு தென்னிந்தியாவிலிருந்து திபெத்துக்கு வந்து, அங்கிருந்து நாஜிகளால் 1937-39ஆம் ஆண்டுக்குள் ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Paris Time


0 comments:
Post a Comment