இயற்கை 'வயாகரா'வாக மாதுளம் பழச் சாறு
தினசரி ஒரு கிண்ணம் மாதுளம் பழச்சாற்றை அருந்தினால் “வயாகரா' பாலியல் ஊக்க மாத்திரையை அருந்திய விளைவு ஏற்பட்டு ஒருவரது பாலியல் ஆற்றல் ஊக்கம் பெறும் என பிரித்தானியாவின் புதிய ஆய்வொன்று கூறுகிறது.
இரு வாரங்களுக்கு தினசரி ஒரு கிண்ண மாதுளம் பழச்சாற்றை அருந்தும் ஆண்களும் பெண்களும் தமது பாலியல் ஆற்றல் அற்புதமான வகையில் விருத்தியடைந்திருப்பதைக் காண்பார்கள் என எடின்பேர்க்கி லுள்ள குயீன் மார்கிரெட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆய்வானது 21 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்ட 58 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது. மாதுளம் பழச்சாறு பாலியல் ஆற்றலை மேம்படுத்துவதுடன் ஒருவரது உணர்வைத் தூண்டி ஞாபகசக்தியையும் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment