விலாசத்தைக் கூறி எஜமானியை வந்தடைந்த பறவை
தனது எஜமானியின் வீட்டிலிருந்து பறந்து சென்ற வேளை வழி தவறிய பறவையொன்று, தனது எஜமானியின் வீட்டு விலாசத்தைப் பொலிஸாரிடம் தெரிவித்து மீளவும் எஜமானியுடன் இணைந்து கொண்ட விசித்திர சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.
டோக்கியோ நகருக்கு மேற்கேயுள்ள சகமிஹரா நகரிலுள்ள தனது எஜமானியின் வீட்டிலிருந்து பறந்து சென்ற மேற்படி பறவை வழி தவறி ஹோட்டலொன்றை சென்றடைந்துள்ளது. இதன்போது அப்பறவை, ஹோட்டலுக்கு வந்த விருந்தினரின் தோளில் அமர்ந்து கொண்டது. இந்நிலையில் அவர் அப்பறவையை பொலிஸாடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து மூன்று நாட்களாக மௌனமாக இருந்த அப்பறவை, நான்காம் நாள் தனது பெயரையும் எஜமானியின் வீட்டு விலாசத்தையும் கூறியுள்ளது.
'பிகோசான்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் பறவை தொடர்பில் அதன் எஜமானியான 64 வயது பெண்மணி விபரிக்கையில், ஏற்கனவே வளர்ப்புப் பறவை ஒன்று காணாமல் போனதால் இந்தப் பறவைக்கு இவ்வாறு தனது விலாசத்தைக் கூறுவதற்கு பயிற்சியளித்ததாகத் தெரிவித்தார்.


Paris Time



0 comments:
Post a Comment