இந்நிலையில் கர்ப்பமான ஷில்பாவுக்கு மே 20ம் திகதியிலிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்று வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.
நேற்றிரவு ஷில்பா வழக்கமான பரிசோதனைக்காக மேற்கு மும்பை கார் பகுதியில் உள்ள ஹிந்துஜா ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு சென்றார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை உடனே சேர்க்குமாறு கூறினர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷில்பாவுக்கு இன்று அதிகாலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அவருக்கு துணையாக மருத்துவமனையில் அவரது கணவர் ராஜ் குந்த்ரா, ஷில்பாவின் தாய் சுனந்தா, தங்கை ஷமிதா ஷெட்டி உள்ளிட்ட உறவினர்கள் இருந்தனர்.
தனக்கு குழந்தை பிறந்த சந்தோஷத்தை ராஜ் குந்த்ரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது மனைவி மற்றும் பிரசவம் பார்த்த மருத்துவர் கிரண் கோயல்ஹோ ஆகியோருக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment