
'பேஸ்புக்' இணையதளத்தின் அதிபர் மார்க் ஷூகர்பெர்க் (28). இவர் இந்த நிறுவனத்தில் இணை நிறுவனராகவும், தலைமை செயல் அதிகாரியாவும் உள்ளார்.
சமீபத்தில் இவர் தனது நீண்டநாள் காதலியான பிரிசில்லாசான் (27) என்பவரை திருமணம் செய்தார். இந்த தகவலை 'பேஸ்புக்' இணையதளத்தில் மார்க் ஷூகர்பெர்க் சமீபத்தில் அறிவித்தார்.
இதை தொடர்ந்து அவருக்கு 'பேஸ்புக்'கின் 9 கோடி உபயோகிப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கிடையே மார்க் ஷுகர்பெர்க் - பிரிசில்லாசான் தம்பதி கலிபோர்னியாவில் உள்ள தங்களது இல்லத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி விருந்து அளித்தனர். அதில் அவர்களது நண்பர்கள் 100 பேர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment