தான் தற்கொலை செய்துகொண்டதை, 19 வயது இளைஞன் ஒருவர் ஒளிப்பதிவு செய்துவைத்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 9ம் திகதி தற்கொலை செய்துகொண்ட இளைஞன், சக நண்பர்களுக்கு “நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன், இதன் ஒளிப்பதிவு எனது கையடக்கத் தொலைபேசியில் இருக்கிறது. கையடக்கத் தொலைபேசி மேசை விளக்கிற்கு அருகில் இருக்கிறது” என குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளான்.
சக நண்பர்களும் இந்த விடயத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி வீட்டிற்கு சென்று பார்ப்பதற்குள் இளைஞன் இறந்துவிட்டான். வாழ்க்கையில் விரக்கியடைந்த இளைஞன், தற்கொலை செய்துகொள்வதற்கான காரணத்தையும் மரணத்திற்கு முன் பதிவுசெய்துள்ளான்.
தனது 19 வயது பூர்த்தியாவதற்கு இரண்டு தினங்கள் இருக்கும்போதே இந்த இளைஞன் இந்த பரிதாப முடிவைத் தேடிக்கொண்டுள்ளான்.
இதற்கு முன்னர் குறிந்த இளைஞனின் குடும்பத்தில் இருந்து அண்ணன் ஒருவரும், அக்கா ஒருவரும் வெவ்வேறு வழிகளில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது
0 comments:
Post a Comment