தாய்மை என்பது நம் எல்லோராலும் போற்றிப்புகழப்படும் ஒரு தெய்வீகமான விடயம், முன்னைய காலங்களில் பால்யவிவாகங்கள் பரவலாக நடைபெற்றுவந்தமையால் பல சிறுமிகள் தங்கள் 10,15 வயதுகளிலேயே தாய்மையடைந்தனர்,இதற்கு உலகம் முழுவதிலும் எதிர்ப்புக்கள் இருந்தன ஆனால் இங்கு 5 வயதேயான ஒரு பெண் தாயான சம்பவம் பற்றி யாருக்காவது தெரியுமா…
மதினாவில உள்ள ஒரு குடும்பத்தில் பிறந்தவள்தான் லிண்டா, வெறும் ஐந்தே வயதான இவளின் வயிறு வளக்கத்துக்கு மாறாக பெருத்துவருவதை அவதானித்த அவளிது பெற்றோர்கள் அவளது வயிற்றில் ஏதாவது கட்டி இருக்கலாம் என அஞ்சி மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர், அங்கே அவர்களுக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது, அவளது வயிற்றில் ஒரு குழந்தை வளர்கின்றது என்று டாக்டர்கள் கூற அவளது தாய் மயக்கம்போட்டே விழுந்துவிட்டாளாம்,
கருவைக்கலைக்கமுடியாத நிலையில் டாக்டர்களின் ஆலோசனைப்படி லிண்டா குழந்தையைப் பெற்றெடுக்க முடிவுசெய்தாள், முடிவில் 2.7 கிலோ எடையுள்ள ஒரு அழகான ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள், அதற்கு ஜெரார்டோ என பெயரிட்டனர், ஆனால் கடைசிவரைக்கும் அவளது குழந்தைக்கு தந்தை யார் என்ற மர்மம் தொடர்ந்துகொண்டே இருந்தது,
முடிவில் லிண்டா தனது 40 வயதிலும் ஜெரார்டோ தனது 76 வயதிலும் மரணத்தைத் தழுவினர்,
இதுதான் உலக வரலாற்றின் மிக இளமையான அம்மாவின் கதை, அவளது சாதனை உலகில் பலவாறாகப் பேசப்பட்டாலும் அது ஒரு சோகங்கலந்த சாதனையாகத்தான் அவளுக்கு இருந்திருக்கும்,
0 comments:
Post a Comment