2ம் உலக மகா யுத்தத்தில் காணாமல் போன விமானம் கண்டுபிடிப்பு
கிட்டிஹாவ்க் P-40 எனும் 2 ஆம் உலக மகா யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று பிரிட்டன் விமானி ஒருவரால் ஓட்டப்பட்டு சஹாரா பாலைவனத்தில் விபத்துக்கு உள்ளாகியிருந்தது.
இது சமீபத்தில் எகிப்து நாட்டுக்கு மேற்கே உள்ள சஹாரா பாலைவனப் பகுதியில் பழுதடையாத நிலையில் பத்திரமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இதை ஓட்டிய பிரிட்டன் விமானி பாரஷூட் மூலம் தப்பித்திருக்கக் கூடும் எனவும் ஆயினும் சஹாரா பாலை வனத்தின் நடுவே நடந்து சென்று ஏதேனும் நகருக்குச் செல்லும் முயற்சியில் தோற்றுப் போய் வெயிலில் இறந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.
கடந்த 1942 ஆம் ஆண்டு யூன் மாதத்தில் இவ்விமானம் காணாமல் போயிருந்தது. இது விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 200 மைல் தொலைவிலேயே அருகிலுள்ள நகரம் அமைந்துள்ளது.
அதிகம் சேதமடையாத துவக்குகள், தொடர்பு சாதனங்கள் மற்றும் கருப்புப் பெட்டியுடன் விபத்துக்குள்ளான இவ்விமானத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளி தற்போது இணையத் தளத்தில் பிரபலமாகியுள்ளன.
0 comments:
Post a Comment