துபாயின் அழகிய கடலடி கட்டிடம்
துபாய் நகரம் கட்டுமானப் பணிகளுக்கு மிகச் சிறந்த நாடாகும்.இதன் தலைநகரில் தான் உலகில் மிகப் பெரிய கட்டடமான பூர்ஜ் கலிஃபா அமைந்துள்ளது. மேலும் சுமார் 18 $ பில்லியன் டாலர்கள் செலவில் இதனை ஒட்டிய கடற்பரப்பில் ‘தி வோர்ல்ட்’ எனும் உலக நாடுகளின் வரைபடத்தை ஒத்த சிறிய தீவுகள் கடலில் மண்ணைக் கொட்டி செயற்கையாக உருவாக்கப் பட்டு வருவதும் நாம் கேள்விப் பட்ட விடயமாகும்.ஆனால் தற்போது இன்னும் புதிய செய்தி ஒன்று என்னவென்றால் துபாயின் சமுத்திரத்தில் விண்கலத்தை ஒத்த வட்ட தட்டு வடிவில் நீருக்கு கீழே ஒரு பகுதியும் அதே போல் நீருக்கு மேல் ஒரு பகுதியும் மையத்தை இணைக்கும் மின் தூக்கித் தூணைத் தவிர இவ்விரு தட்டுக்களை இணைக்கும் மூன்று தூண்களும் அடங்கலாக சொகுசு ஹோட்டல் ஒன்றை அமைக்கவுள்ளனர் என்பதாகும்.
இதைக் கட்டுவதற்கு சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பொறியியற் கம்பனி ஒன்றுடன் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. நீருக்கடியில் 32 அடி ஆழமும் 21 அறைகளும் கொண்ட இந்த ஹோட்டலில் தண்ணீரில் டைவ் பண்ணக் கூடிய இடங்களும் ஒவ்வொரு அறையும் அலங்கார விளக்குகளுடன் கண்ணாடி வழியாக கடல் வாழ் உயிரினங்களையும் அழகிய சூழலைப் பார்க்கும் வண்ணமும் அமைந்துள்ளன.
0 comments:
Post a Comment