மெக்ஸிக்கோவில் தலை வெட்டப்பட்டு உடல் துண்டாக்கப்பட்ட 49 சடலங்கள் மீட்பு ..
வடமெக்ஸிக்கோவின் மொன்ரெர்றி நகருக்கு அண்மையில் தலை வெட்டப்பட்டு உடல் துண்டாக்கப்பட்ட நிலையில் 49 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆண்களும் பெண்களும் தலை துண்டிக்கப்பட்டு கைகள் வெட்டப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அச்சடலங்களை அடையாளங் காண்பது சிரமமாகவுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். போதைவஸ்து குழுக்களுக்கிடையிலான மோதலே இந்தப் படுகொலைகளுக்கு காரணமென குற்றஞ் சாட்டப்படுகிறது.
மேற்படி துண்டாக்கப்பட்ட சடலங்களுடன் காணப்பட்ட துண்டுக் குறிப்பு ஒன்றில் இந்தப் படுகொலைகள் ஸெடாஸ் போராளி குழுவால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸெடாஸ் போராளி குழுவானது அமெரிக்காவுக்கு போதைவஸ்தை கடத்துவதற்கான பாதைகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முகமாக வளைகுடா போதைவஸ்து குழு மற்றும் சினலோவா போதைவஸ்து குழு என்பவற்றுடன் போராடி வருகிறது.
மேற்படி 49 பேரும் பிறிதொரு இடத்தில் இரு தினங்களுக்கு முன் கொல்லப்பட்டு டிரக் வண்டியில் எடுத்து வரப்பட்டு மொன்ரெர்றி அண்மையில் போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
வட மெக்ஸிக்கோவில் கைவிடப்பட்ட இரு வாகனங்களில் 18 பேரின் உடல் துண்டிக்கப்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டு சில நாட்களிலேயே மொன்ரெர்றி நகரில் மேற்படி சடலங்கள் போடப்பட்டுள்ளன.


Paris Time



0 comments:
Post a Comment