மலேரியா பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அதனை கட்டுப்படுத்த இயலவில்லை. இதுவரையிலும் மலேரியாவை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது என்பது பெரும் சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் மலேரியாவை பரப்பும் கொசுக்கடியில் இருந்து தப்ப என்னென்ன செய்யலாம் என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஒரு ஆடை தயாரிப்பு நிறுவனமும் விஞ்ஞானிகள் குழுவும் சேர்ந்து புதிய வகை நவீன ஆடை ஒன்றை தயாரித்துள்ளனர்.
இந்த நவீன ஆடை சமீபத்தில் நடந்த உடை கண்காட்சியில் இடம் பெற்றது. இந்த ஆடை மலேரியா தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றும் என்ற தகவலால் பார்வையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.
வழக்கமாக நாம் அணியும் உடையை விட்டு இந்த நவீன உடை 3 மடங்கு பாதுகாப்பு கொண்டது. மலேரியா பரப்பும் கொசுக்களால் இந்த உடைக்குள் ஊடுருவி கடிக்க இயலாது.
6 மாதம் வரை இந்த நவீன உடையை பயன்படுத்த முடிவும். இந்த உடை விரைவில் உலகம் முழுவதும் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.


Paris Time


0 comments:
Post a Comment