
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள வீரர் லூக் போமெர்ஸ்பாச்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் மீது அமெரிக்க வாழ் இந்திய பெண்ணான ஜோஹல் ஹேமந்த் என்பவர் மானபங்க புகார் கூறினார். டெல்லி நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்து நிகழ்ச்சியில் தன்னை மானபங்கபடுத்த முயன்றதாகவும், அதை தடுக்க முயன்ற தனது காதலன் சகீலை தாக்கியதாகவும் கூறினார்.
இந்த பாலியல் புகார் விவகாரம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக டெல்லி போலீசார் லூக்கை கைது செய்தனர். தற்காலிக ஜாமீனில் வந்த அவருக்கு கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
நட்சத்திர ஓட்டலில் உள்ள கேமிராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளை பார்த்த மாஜிஸ்திரேட் அமெரிக்க பெண் ஜோஹல் ஹேமந்த் அறைக்குள் லூக் அத்துமீறி நுழைய முயன்றதற்கான ஆதாரம் இல்லாததால் அந்த குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவிப்பதாக அறிவித்தார். அவர் தனது பாஸ்போர்ட்டை டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அதன்படி லூக் சாணக்கியாபுரி போலீஸ் நிலையத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.
இதற்கிடையே மேலும் 3 ஐ.பி.எல். வீரர்கள் உள்பட 5 பேர் மீது ஜோஹல் ஹேமந்த் புதிய குற்றச்சாட்டை போலீசில் கொடுத்துள்ளார். அதில் லூக் மீதான பாலியல் புகாரை வாபஸ் பெறாவிட்டால் தன்னை கொன்று விடுவதாக மிரட்டினார்கள் என்று கூறியுள்ளார். இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தனது நடத்தை பற்றி விமர்சனம் செய்த சித்தார்த் மல்லையாவுக்கு ஜோஹல் ஹேமந்த் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும் இதுதொடர்பாக டெல்லி பெண்கள் அமைப்பிடமும் அவர் எழுத்து பூர்வமாக புகார் அளித்துள்ளார்.
0 comments:
Post a Comment