மரணச்சடங்கில் புதைக்கத் தயாரான போது உயிர்த்தெழுந்த இளைஞன் ..


மரணமான உணவக ஊழியரான 24 வயது இளைஞர் ஒருவரது மரணச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றவர்கள் அவரது உடலைப் புதைக்கத் தயாரான வேளை அவர் திடீரென விழித்து எழுந்ததால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது.

லக்ஸொர் நகருக்கு அருகிலுள்ள நகா அல் சிம்மான் எனும் இடத்தைச் சேர்ந்த ஹம்டி ஹபெஸ் அல் நுபி (24 வயது) என்ற மேற்படி இளைஞர் பணியில் இருந்தபோது மாரடைப்புக்குள்ளானார்.இதனையடுத்து அவர் மரணமானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இஸ்லாமிய முறைப்படி ஹம்டி ஹபெஸ் அல் நுபியின் சடலத்தைக் கழுவி உறவினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை புதைப்பதற்குத் தயாராகியுள்ளனர். இந்நிலையில் அவரது மரணச் சான்றிதழில் கையெழுத்திட அங்கு வந்த மருத்துவர் ஒருவர், ஹம்டி ஹபெஸ் அல் நுபியின் சடலம் வெதுவெதுப்பாக இருப்பதை அவதானித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர் பரிசோதனை செய்தபோது அவரிடமிருந்து மூச்சு வெளி யேறுவதைக் கண்டறிந்துள்ளார். உடனடி முதலுதவி சிகிச்சைகளையடுத்து இளைஞர் கண் விழித்து எழுந்துள்ளார்.

இளைஞர் மரணமடைந்ததாகக் கருதி சோகத்துடன் இருந்த அவரது தாய், தனது மகன் இறக்கவில்லை என்பதை அறிந்ததும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக மரணச்சடங்கு இரத்துச் செய்யப்பட்டு இளைஞர் உயிர் மீண்டதைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India