மதிய உணவிற்காக பல்லி மற்றும் ஓணான்களுடன் பயணம் செய்த நப
விமானத்தில் பல்லி மற்றும் ஓணான்களுடன் பயணித்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஜேர்மன் நாட்டை சேர்ந்த 28 வயது நபர் ஓமன் நாட்டுக்கு சென்று விட்டு மூனிச் நகருக்கு திரும்பினார்.
இவரை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்த போது, மதிய உணவுக்காக 49 பல்லி மற்றும் ஓணான்களை வைத்திருந்தது தெரியவந்தது.
சமைப்பதற்காக தான் இதை கொண்டு வந்தேன் என்பதை நிரூபிப்பதற்காக, இவர் ஒரு ஓணானின் தலையை கடித்து சாப்பிட்டார்.
பின்னர் இதை ஒப்புக்கொண்ட விமான நிலைய அதிகாரிகள், விமானத்தில் இதுபோன்ற உயிரினங்களை கொண்டு வரக்கூடாது என்ற தடை உள்ளதால், அந்த நபருக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டும் படி கூறினர்.
0 comments:
Post a Comment