சீனாவில் ஸிங்சியாங் பகுதியில் பாலைவனம் உள்ளது. இப்பகுதியில் சமீபத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டனர்.
அப்போது பழமையான புத்தர் கோயில் ஒன்றை கண்டுபிடித்தனர். இக்கோயிலில் உள்ள குறிப்புகளில், இந்தியாவில் இருந்து சீனாவுக்கு புத்தமதம் பரவிய விதம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இதன் அமைப்பு வழக்கமான கோயில்களில் இருந்து வித்தியாசமாக உள்ளதாகவும் மைய மண்டபத்தில் மிக பெரிய புத்தர் சிலை இருக்கிறது என்றும் அகழ்வாராய்ச்சி குழு தலைவர் உசின்ஹுவா தெரிவித்தார்.
மேலும் இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 2 மாதங்களாக இப்பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment