காதலில் விழுந்த சச்சின் மகன்
எனது மகன் அர்ஜுன் கிரிக்கெட் மீது காதல் கொண்டுள்ளான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல "டைம்' நாளிதழ் இந்த வார இதழின் அட்டைப்படத்தில் ”The God Of Cricket" என்ற தலைப்பில் சச்சினின் படத்தை வெளியிட்டு கவுரவித்துள்ளது.
இந்நாளிதழிக்கு சச்சின் அளித்த பேட்டியில், எனது மகன் அர்ஜுனை(11) கிரிக்கெட்டை தெரிவு செய்யும்படி யாரும் நிர்ப்பந்திக்கவில்லை. அவனாகவே கிரிக்கெட் மீது காதல் கொண்டுள்ளான்.
எத்தனை மணி நேரம் பயிற்சி செய்கிறான் என்பது முக்கியமில்லை. கிரிக்கெட்டை அவன் அனுபவித்து விளையாட வேண்டுமென விரும்புகிறேன். கிரிக்கெட் ஆர்வம் முதலில் இதயத்திலிருந்து தொடங்கும். பின்பு ஒருவர் வளர்ச்சி அடையும் போது மூளைக்கு செல்லும் என்றார்.
கிரிக்கெட் போட்டிகளில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தரமாக செயல்பட விரும்புவதாலேயே பல இரவுகளில் தூக்கத்தை தொலைத்திருக்கிறேன். ஆனாலும், இந்நெருக்கடி என்னுள் இருக்கும் திறமையை வெளிப்படுத்த உதவியாக அமைந்தது.
எனது கவனம் எப்பொழுதும் கிரிக்கெட் தொடர்பான விடயங்களில் மட்டுமே இருக்கும் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment