
செக்குடியரசு நாட்டின் கர்லோ விவெய்ரி மாகாணத்தில் ஸ்லாவ்கோவ் நகரின் ஆற்றின் குறுக்கே இரும்பு ரெயில்வே பாலம் உள்ளது. இது பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.
கடந்த 1910-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் 101 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த இரும்பு பாலத்தில் 200 மீட்டர் நீளத்துக்கு தண்டவாளமும் உள்ளது. இதனை சில விஷமிகள் கிரேன் மூலம் பெயர்த்து எடுத்து திருடி சென்றுள்ளனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு போலீஸ் கண்முன்பு நடந்தது. இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தபோது ரெயில்வே நிர்வாகத்திடம் ஒப்புதல் பெற்றுதான் அதனை எடுத்து செல்வதாக அந்த கும்பல் தெரிவித்தது. அதற்கான போலி ஆவணத்தையும் காட்டியது. திருட்டு போன இரும்பு பாலத்தின் எடை 10 டன். அதன் மதிப்பு ரூ.30 கோடி.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment