
செக்செலாவுட்டென் என்ற விழாவில் ஒரு பெரிய பனி மனிதனை 80 கிழோ எடையில் உருவாக்குவர். பின்பு அந்தப் பனிமனிதனின் தலைக்குள் பட்டாசுகளை வைத்து நிரப்பியிருப்பர்.
தேவாலயத்தின் மணி ஆறு அடித்ததும் பனி மனிதனுக்குக் கீழே போட்டிருந்த பழைய தேவையற்ற பொருட்களில் தீ வைத்து விடுவர்.
அதன் தலை வெடிக்கும் வரை காத்துக்கொணடிருப்பர். சீக்கிரமே அதன் தலை வெடித்துவிட்டால் அந்த ஆண்டு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று நம்புவர். கடந்த சில ஆண்டுகளில் சராசரியாக பனி மனிதனின் தலை வெடித்து சிதற 18 நிமிடங்கள் 42 வினாடியும் ஆயிற்று.
வெப்பம் மிகுந்த 2003 ஆம் ஆண்டின் போது ஐந்து நிமிடம் 42 நொடியிலேயே தலை டெித்துவிட்டது. மீட்டியோ ஸ்விஸ் என்ற வானிலை ஆய்வு மையம் 2007 ல் இந்த நம்பிக்கை குறித்து ஓர் ஆய்வு நடத்தியது.
கடந்த 50 ஆண்டுகளின் பனி மனிதன் வெடித்த நேரத்தையும் அதைத் தொடர்ந்து வந்த கோடைக்காலத்தின் வெப்பத்தையும் கணித்துப் பார்த்ததில் உண்மை இருப்பது தெரியவந்தது.
ஆயிரக்கணக்கனோர் ஜுரிச் நகரத்தின் தெருக்களில் துாறல் போடும் இரவில் நின்று இந்த தீ கொளுத்தும் சடங்குக்குச் செல்லும் மக்களை வேடிக்கை பார்த்தனர்.
இதற்கு பொருளாதாரத் துறை அமைச்சர் ஜோஹான் ஸ்க்னீடெர் பாதுகாப்புத் துறை அமைச்சர் உயேலி மாரெர் இலண்டன் மாநகர மேயர் டேவிட் ஊட்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment