கல்தோன்றா.. மண் தோன்றா காலத்திலும் வாழ்ந்து வந்த மூத்த குடி நம் தமிழர்கள் என்பார்கள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி போன்ற வனப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குள்ளர்கள் வாழ்ந்து வந்தது தெரிய வருகிறது. இதை வனப்பகுதி மக்கள் தகுந்த ஆதாரங்களுடன் விளக்கி உள்ளனர்.
இந்த குள்ள மனிதர்கள் ஒருஅடி உயரமே இருந்ததாக வனப்பகுதி மக்கள் கூறி உள்ளனர். இந்த குள்ள மனிதர்கள் அப்பகுதியில் கற்களால் முட்டு வைத்து வீடுகள் கட்டி உள்ளனர். மேலும் தாங்கள் விளைவித்த தானிய வகைகளை சேமித்து வைக்க கிடங்கு வெட்டி வைத்து உள்ளனர். இந்த கற்களால் கட்டப்பட்ட வீடுகளும், தானியத்தை சேமித்து வைத்துள்ள கிடங்கு (முதுமக்கள்தாழி) வனப்பகுதியில் இன்றும் காணப்படுவது ஆச்சரியமே,
இதில் ஆசனூர் வனப்பகுதியையொட்டி உள்ள தேவர்நத்தம் கோட்டாடை ஆகிய பகுதியில் உள்ள காடுகளில் குள்ளர்கள் வாழ்ந்து வந்த வீடுகள் அதிகளவில் காணப்படுவதாக அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறி உள்ளனர். ஆசனூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் கோட்டாடையில் வாழ்ந்து வரும் ரவி ஆகியோர் கூறியதாவது:-
பல ஆண்டுகளுக்குமுன் இப்பகுதியில் குள்ள மனிதர்கள் வாழ்ந்து உள்ளதாக எங்கள் முன்னோர்கள் கூறி உள்ளனர். அந்த குள்ள மனிதர்கள் ஒரு அடி அல்லது அரை அடி உயரத்தில்தான் இருப்பார்களாம். அவர்கள் சொல்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதேசமயம் காட்டுக்குள் அவர்கள் வசித்து வந்ததாக கூறப்படும் கற்களால் சுற்றி வைத்து கட்டப்பட்ட பல வீடுகள் இன்னும் இருப்பதை பார்க்கும்போது எங்களால் நம்பாமலும் இருக்க முடிய வில்லை.
இந்த குள்ள மனிதர்கள் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து உள்ளனர். இவர்கள் வனப்பகுதியில் சிறு சிறு விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டு வயிற்றுப்பசியை தணித்துள்ளனர். மேலும் இந்த குள்ள மனிதர்கள் அந்த காலத்திலேயே ராகி பயிரிட்டு வந்ததாகவும், விவசாயத்துக்கு இப்போது நாம் மாடுகளை பயன்படுத்தி வருவதுபோல் அந்த குள்ள மனிதர்கள் விவசாயத்துக்கு முயல்களை பயன்படுத்தி வந்ததாகவும் எங்களது முன்னோர்கள் சொல்வது மேலும் ஆச்சரியமாகவும் வியப்பாகவும் உள்ளது.
குள்ளர்கள் காலத்தில் உள்ளமுதுமக்கள் தாழி மற்றும் அவர்கள் தோண்டிய குழிகள் எல்லாம் இன்றும் தூர்ந்த நிலையில் இருப்பதை பார்க்கும்போது இதை நம்பாமல் இருக்க முடியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்.
0 comments:
Post a Comment