தண்ணீர் குடிக்காமல் வெயிலில் விரதம் இருந்த பெண் பரிதாபமாக இறந்தார். சுவிட்சர்லாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள உல்ப்கால்டன் நகரை சேர்ந்தவர் மரியம் (55), (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் ஆஸ்திரியாவை சேர்ந்த ஒருவரின் ஆவண படத்தை பார்த்தார். அதில் இந்தியாவை சேர்ந்த சாமியார் ஒருவர் தண்ணீர் மற்றும் உணவு எதுவும் சாப்பிடாமல் வெயிலில் கடும் விரதம் இருந்து 70 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருவதாக கூறப்பட்டிருந்தது.
அதன்படி, மரியமும் தண்ணீர் குடிக்காமலும், உணவு சாப்பிடாமலும் ஆன்மீக விரதம் இருந்தார். கடந்த 2010-ம் ஆண்டு அவர் தனது விரதத்தை தொடங்கினார். ஆனால் கடந்த ஜனவரி மாதம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது. இது போன்ற கடும் விரதத்தை ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பலர் மேற்கொண்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment