கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு ஆண் வர்க்கம்!


இந்த உலகத்திலேயே ஆண் வர்க்கத்தை பொறுத்த வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு உயிரினம் கடல் குதிரைதான். கடல் குதிரைகளிடையே உடல் உறவு என்பது கிடையாது. பரஸ்பரம் சீண்டிக் கொள்கின்றன. இச்சீண்டல்களை தொடர்ந்து பெண் கடல் குதிரையின் உடல் சிலிர்த்து விடுகின்றது.

ஆண் கடல் குதிரையின் வயிற்றுப் பகுதியில் இனப் பெருக்க பை என்கிற உறுப்பு காணப்படுகின்றது. ஆணின் இவ்வுறுப்புக்குள் பெண் கடல் குதிரை மிகவும் நுட்பமான முறையில் முட்டைகளை உட்செலுத்தி விடுகின்றது. ஆண் கடல் குதிரை கர்ப்பம் தரித்து விடுகின்றது.

 

ஆண் கடல் குதிரையின் வயிற்றில் சுரக்கின்ற ஒரு வகை திரவம்தான் குட்டிகளுக்கு உணவு. மூன்று வாரங்களின் பின் குட்டிகளை வெளித் தள்ளி விடுகின்றது ஆண் கடல் குதிரை. ஒரு பெரிய படையை போல குட்டிகள் வெளியில் வந்து விடுகின்றன. பிரசவ வேதனை மிகவும் கொடுமையானதுதான்.

 

ஆண் கடல் குதிரை பிரசவம் செய்வதை காண நம் வாசகர்கள் மிகவும் ஆவலாக இருப்பார்கள். எனவே இவ்வீடியோவைப் பார்த்து மகிழுங்கள்.

 




0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India