
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கார்ட்டூன் படங்களையே சிறு குழந்தைகள் விரும்பி பார்த்து ரசிப்பார்கள். அதில் இடம்பெறும் கதாபாத்திரம் செய்யும் வித்தியாசமான செயல்கள் இவர்களை குதூகலப்படுத்துகிறது. சமீபத்தில் 9-10 மாதமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை பற்றிய யூடியூபில் வெளியான வீடியோ காட்சி ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதாவது அந்த குழந்தை தனது தந்தையின் மேஜை மீது தொங்கிக் கொண்டு கம்ப்யூட்டரில் ஓடிய கார்ட்டூன் படத்தை பார்த்த காட்சி தான் அது. இது பற்றி அந்த குழந்தையின் தாய் கூறுகையில், `சத்தம் வருவதை கேட்ட அவன் டி.வி.யில் கார்ட்டூன் படம் ஓடுகிறது என நினைத்து அதை பார்க்கும் ஆவலில் மேஜையில் தொற்றி இருக்கிறான். நல்லவேளையாக தவறி கீழே விழவில்லை' என்று கூறினார்.
0 comments:
Post a Comment