முதுகெலும்பு தண்டு வடத்துக்கு அருகே மேலதிகமாக மூன்றாவது கரத்துடன் பெண் குழந்தையொன்று பிறந்த அதிசய சம்பவம் பாகிஸ்தானின் டெரா காஸி கான் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.
திங்கட்கிழமை பிறந்த மேற்படி குழந்தை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.
நிஷத்தார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அக்குழந்தையின் மூன்றாவது கரத்தை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இவ்வாறு மேலதிக அவயத்துடன் குழந்தை பிறப்பது ஒரு மில்லியன் பிறப்புகளுக்கு ஒரு பிறப்பு என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.
இதற்கு முன்பு இம்மாத ஆரம்பத்தில் பாகிஸ்தானின் சுக்குக் பிரதேசத்தில் 6 கால்களுடன் உமா பாரூக் என்ற ஆண் குழந்தை பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment