குழந்தையில் நடந்த திருமணத்தை மறுத்த 16 வயது பெண்

width="200"

ஜெய்பூர், ஏப்.24
குழந்தையாக இருந்தபோது நடைபெற்ற திருமணத்தை மறுத்த லக்ஷ்மி என்னும் 16 வயது பெண், தான் தற்போது மேற் படிப்பு படிக்க விரும்புவதாகவும் பின் வேலைக்கு செல்ல விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் குழந்தை திருமண தடை சட்டத்தின் படி இது குற்றம் எனவும், இது குறித்து தான் ஒரு தொண்டு நிறுவனத்தை நாடியுள்ளதாகவும் , தனக்கு ஹிந்து திருமண சட்டம் 1956 செக்சன்  10 ன் கீழ், சட்ட தீர்வு வேண்டும் என ராஜஸ்தான் மாநில தலைநகரில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள லூனி நகரை சேர்ந்த அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
தான் குழந்தையாக இருக்கும்போது 1996 ம் வருடம்  ராகேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்று விட்டதாக தன் அண்ணன் ஹனுமான் கூறியதாகவும், இதை கேட்டபோது தான் அதிர்ச்சியடைந்ததாகவும் கூறினார்.
 
மேலும், அப்பெண் தற்போது தான் தன் அண்ணனுடன் கடந்த 16  ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும் தற்போது ராகேஷ் என்பவருடைய  வீட்டிற்கு செல்ல கட்டாயபடுத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது போன்ற மரபு பழக்கவழக்கம் காவுனா என அப்பகுதியில் அழைக்கப்படுவதாகவும், தற்போதும் இப்பழக்கம் இந்த கிராமங்களில் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்த அப்பெண், தான் மேற் படிப்பு படித்து வேலைக்கு செல்ல விரும்புவதாகவும் மேலும் தெரிவித்தார்.



0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India