இங்கிலாந்தை சேர்ந்த தம்பதி ரீமி ஹோர்டெர்-கெலீ ஹோட்சான். இவர்களில் தாய் வெள்ளை நிறமும், தந்தை கருப்பு நிறமும் கொண்டவர்கள். இந்த நிற வேறுபாடு இவர்களது குழந்தைகளிடமும் அப்படியே பிரதிபலித்தது. கடந்த 2005-ம் ஆண்டில் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் சுமார் ஒரு நிமிட இடைவெளியில் பிறந்தன.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குழந்தை வெள்ளை நிறத்திலும், மற்றொரு குழந்தை கருப்பு நிறத்திலும் காட்சி தந்தார்கள். இந்த இரட்டை சகோதரிகளில் கருப்பு நிற குழந்தைக்கு கியான் என்றும், வெள்ளை நிற குழந்தைக்கு ரிமீ என்றும் பெயர் சூட்டியுள்ளனர். தற்போது 7-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கின்றனர்.
பள்ளிக்கூடம் சென்றாலும், வீட்டில் இருந்தாலும் 2 பேரும் ஒரே மாதிரியான ஆடைகளை தான் அணிகிறார்கள். குணத்தில் வேறுபாடு இல்லை. ஆனால் செயலில் சற்று வித்தியாசமாக கியானுக்கு செல்லப்பிராணிகள் மீது அதிக பாசம் காட்டுவதும், ரிமீ சமையல் செய்வதில் விருப்பம் உள்ளவராகவும் இருக்கின்றனர்.
இந்த இரட்டை குழந்தைகளின் தாய் கெலீ(வயது 25) கூறுகையில், `வெவ்வேறு நிறத்தில் இருப்பதால் எங்களுக்கோ, அந்த குழந்தைகளுக்கோ எந்த பிரச்சினையும் தோன்றவில்லை. நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறோம். பிறக்கும் போது இரு குழந்தைகளும் நீலநிற விழிகளுடன் மிகஅழகாக இருந்தனர்.
கொஞ்சநாள் கழித்த பிறகு ஒரு குழந்தையின் தலைமுடி இளம்பொன்னிறத்திலும், மற்றொரு குழந்தைக்கு கருப்பு நிறத்திலும் மாறியது' என்று கூறுகிறார். இது போன்ற பிறப்பு 10 லட்சத்தில் ஒன்று இருக்கும் என மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


Paris Time


0 comments:
Post a Comment