அமெரிக்காவில் உள்ள புளோரிடா பகுதியில் வசிப்பவர் பிரெட் குயின்ரிட். தற்போது 89 வயதாகும் அவர் தபால் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பண்டைக்கால எகிப்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்துக்கு சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களை பார்வையிட்டார்.
அங்குள்ள நல்லடக்கம் செய்யும் முறைகள் அவருக்கு பிடித்து விட்டதால் தன்னுடைய மறைவுக்கு பிறகும் அதை பின்பற்ற தீர்மானித்தார். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய அவர் தனக்கு தானே சவப்பெட்டியை உருவாக்கினார். பழங்கால எகிப்திய புத்தகத்தை வாங்கி அதில் கூறப்பட்டிருப்பதை பின்பற்றி அதை செய்து முடித்தார்.
7 அடி நீளம் கொண்ட அந்த பெட்டியின் மீது பலவர்ண படங்களை தீட்டி வைத்துள்ளார். இந்த பெட்டிக்குள் எப்போது அடங்கப்போகிறோம் என்ற ஆதங்கத்துடன் வாழ்நாளை அவர் எண்ணிக் கொண்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment