அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தை நிறுவி வருகின்றன. அதற்கான பணியில் அந்த நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா வாழ் இந்திய விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ரஷியா, ஜப்பான் விண்வெளி வீரர்களும் வருகிற ஜூலை 15-ந்தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இவர்கள் ரஷியாவின் சோயுஷ் விண்கலத்தில் பயணம் செய்ய உள்ளனர். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ள சுனிதா வில்லியம்ஸ் ஹுஸ்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்துக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற அமெரிக்காவின் விண்வெளி ஓடமான கடந்த ஆண்டு ஓய்வு பெற்றது. அதை தொடர்ந்து வேறு விண்வெளி ஓடம் 'ஸ்பேஷ்100' என்ற விண்கலம் தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கலிபோர்னியா மாகாணத்தின் ஹாவ்துரோனில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த விண்கலம் தயாரிக்கும் பணி முடிவடைந்து விட்டது.
அது அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந்தேதி புளோரிடாவில் உள்ள கேப்கானவரல் விண்வெளி தளத்தில் இருந்து ஸ்பெஷ் 10 பால்கான் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. இது மே 3-ந்தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தை சென்றடையும். இந்த விண்கலம்தான் விண்ணில் பாயும் உலகிலேயே முதல் தனியார் விண்கலமாகும். இந்த விண்கலம் வெற்றி பெற்றால் ஆகஸ்டு மாதம் அடுத்த விண்கலம் சரக்குகளை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment