எலிசபெத் ராணியின் அறுபது ஆண்டு கால ஆட்சியை போற்றும் வகையில், லண்டனில் அமைந்திருக்கும் போற்றத்தக்க பிக் பென் கடிகாரத்தை எலிசபெத் கோபுரம் என பெயர் மாற்றும் முயற்சிக்கு மூத்த எம்.பி.க்கள் ஆதரவு அளித்து வருவதாக சன் செய்தித்தாள் அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக, கடிகார கோபுரம் என்று பெயரிடப்பட்ட இது, கடந்த 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் கட்டிமுடிக்கப்பட்டது. அன்றிலிருந்து, ஆங்கில தலைநகரின் உருவக சின்னமாக இது மாறியது.
இந்த பெயர் மாற்றம் திட்டத்தை டோரி எம்.பி. தோபியாஸ் கால்வுட் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளார். இது தொடர்பாக, ஏற்கனவே இவருக்கு கட்சிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.
மேலும், அவர் கூறியதாவது-
பாராளுமன்றத்துக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இத்தகைய போற்றுதற்குரிய கடிகாராத்திற்கு பெயர் மாற்றுவதைத் தவிர வேறு எதையும் என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
அனைவரும் இதை பிக் பென் என்றே அழைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால், அதிகாரப்பூர்வ பெயரை மாற்றுவதே சரியானதாகும்.
முன்னதாக, பிரிட்டிஷ் பாராளுமன்றக் கட்டிடத்தின் மற்றொரு கோபுரத்தை கிங்ஸ் கோபுரம் என்று அழைத்துக்கொண்டிருந்தனர். பின்னர், இளவரசி விக்டோரியாவுக்கு மரியாதை செலுத்தும் நிமித்தமாக கடந்த 1860 ஆம் ஆண்டில் அதற்கு விக்டோரியா கோபுரம் என பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment