ஜெர்மனியின் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் அடால்ப் ஹிட்லர். இவரது வீடியோ காட்சிகள் மூலம் துருக்கியை சேர்ந்த ஒரு ஷாம்பூ நிறுவனம் விளம்பர படம் தயாரித்துள்ளது. அதில், ஹிட்லர் தலைமையில் பேரணி நடக்கிறது. அதில் பங்கேற்றுள்ளவர்களிடம் பெண்கள் பயன்படுத்தும் ஷாம்பூவை ஆண்கள் கட்டாயம் பயன்படுத்தகூடாது. இந்த விளம்பரம் தயாரித்த ஷாம்பூவை தான் அவர்கள் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடுவது போன்று உள்ளது.
கருப்பு, வெள்ளையில் தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரம் சுமார் 13 வினாடிகள் ஓடுகிறது. இதற்கு துருக்கியில் வாழும் யூதர்களின் மத்தியில் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இஸ்தான்புல்லில் இருந்து ஒளிபரப்பாகும் யூதர் மத வெப்சைட்டில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்த விளம்பரம் அபத்தமானது. லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த ஹிட்லரை மையமாக வைத்து விளம்பரம் தயாரித்து இருப்பது கண்டனத்துக்குரியது.
எனவே, இதை அந்த ஷாம்பூ நிறுவனம் வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷாம்பூ நிறுவனம் நகைச்சுவை உணர்வுடன்தான் இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் உள்நோக்கம் இல்லை என தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment