சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மெகா ஹிட்டான படம் 'பில்லா'. இப்படத்தை கடந்த 2007-ம் வருடம் தமிழில் ரீமேக் செய்தனர். அதில் அஜீத், நயன்தாரா ஆகியோர் நடித்தனர். இப்படமும் மெகா ஹிட்டானது. இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார்.
இதையடுத்து, இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யும்படி ரசிகர்கள் வற்புறுத்தினர். இதையடுத்து பில்லா படத்தை மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
சிவாஜியின் கர்ணன், ஆரண்யகாண்டம், முப்பொழுதும் உன் கற்பனைகள், வெங்காயம் படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது பில்லாவும் இணைந்துள்ளது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அஜித் நடிப்பில் சக்ரி டோலடி இயக்கும் பில்லா-2 படமும் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளிவரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Paris Time


0 comments:
Post a Comment