ஹங்கேரியைச் சேர்ந்தவர் கபோர் ரகான்சே. இவர் எடை குறைந்த லேசான துடுப்பு படகு மூலம் அட்லாண்டிக் கடலில் சாகச பயணம் மேற்கொண்டார்.
கடந்த டிசம்பர் 21-ந்தேதி போர்ச்சுக்கல்லில் உள்ள லாகோஸ் நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். வழியில் அவரது படகு கவிழ்ந்தது. இருந்தும் அதையும் சமாளித்து தனது 76 நாள் பயணத்துக்கு பிறகு அட்லாண்டிக் கடலின் எல்லையான கரீபியன் பகுதியை அடைந்தார்.
வழியில் அவர் கானாரி தீவில் சில நாட்கள் தங்கி ஓய்வெடுத்தார். தற்போது சிறு துடுப்பு படகு மூலம் அட்லாண்டிக் கடலை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
0 comments:
Post a Comment