பாம்பை பதம்பார்க்கும் அதியச சிலந்தி ஆபிரிக்காவில் !


ஆபிரிக்காவில் இருக்கும் ஒருவகை சிலந்திகள் பாம்பையே கொல்ல வல்லது எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வகையான சிலந்திகள் தமது இரையைக் கொலைசெய்ய தமது நச்சுத்தன்மையுள்ள கொடுக்கைப் பயன்படுத்துவது இல்லை. சிலந்தி வலைகளையே பயன்படுத்துகிறது. பொதுவாக சிலந்திவலை என்றால் நாம் நினைப்பதுபோல மென்மையாக இருக்கும். அதில் பூச்சிகளும் சிறு புழுக்களும் சிக்கிக்கொள்ளும். ஆனால் பாம்பு சிக்கிக்கொள்ளுமா ? அவ்வளவு தூரம் கடினமான சிலந்திவலைகளை நீங்கள் பார்த்தது உண்டா ? ஆம் இங்கே காணப்படும் சிலந்திவலையானது மிக மிகக் கடுமையானது. இதில் பாம்பு சிக்கிக் கொண்டால் கூட அசையமுடியாத நிலை தோன்றும்.

ஆபிரிக்காவில் உள்ள அலுவலகம் ஒன்றின் கதவைத்திறந்துகொண்டு காலைவேளை உள்ளே நுளைந்த பணியாளர் ஒருவருக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. காரணம் அங்கே தொங்கிக்கொண்டு நின்ற பாம்புதான். அதாவது சிலந்திவலையில் சிக்கிய பாம்பு துடித்துக்கொண்டு இருக்கிறது. அதனைச் சுற்றி மேலும், வலையைப் பின்னிக்கொண்டு இருக்கிறது அச் சிலந்தி. அங்கே சிக்கித் தவித்து குற்றுயிரும் குலையுமாக இருக்கும் பாம்பின் எடை சுமார் 2 கிலேவுக்கு மேலே இருக்கும். அவ்வளவு பாரத்தையும் தாங்கும் வண்ணம் அதன் சிலந்திவலை அமைந்திருப்பதே அதிசயமான விடையமாகும்.

ஒரு பாம்போடு ஒப்பிடும்போது, அச் சிலந்தி சுமார் 200 மடங்கு சிறியதாகும். ஆனால் அது சுரக்கும் (சிலந்திவலை நூலின்) பலம் அளவுக்கதிகமானது. இதனை வைத்து நாம் அறிந்துகொள்ளவேண்டியது ஒன்றும் இருக்கிறது. எதிராளி எவ்வளவு பொரிதாக இருக்கிறான் என்பது முக்கியமே அல்ல, முளையும் திறமையும் தான் இறுதியாகவேலைசெய்யும். அதுதான் வெல்பவனுக்கு முக்கியம். இது தற்போது உள்ள நிலையில் தமிழர்களுக்கும் நன்றாகப் பொருந்தும் அல்லவா ?

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது:










0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India