
மகாத்மாகாந்தி தென் ஆப்பிரிக்காவில் தங்கி வக்கீல் தொழில் புரிந்தார். அப்போது அவர் ஜோகன்ஸ் பர்க் புறநகரில் உள்ள ஆர் சார்ட்ஸ் என்ற இடத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்தபோதுதான் அவர் நிறவெறி மற்றும் ஆங்கிலேயர் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டார்.
அவர் தங்கியிருந்த வீட்டை பிரான்சை சேர்ந்த வாயே ஜர்ஸ் டூ மாண்டீ என்ற டிராவல்ஸ் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு விலைக்கு வாங்கியிருந்தது. தற்போது அந்த வீடு ஆடம்பரமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கு சத்யாகிரக இல்லம் என பெயர் சூட்டப் பட்டுள்ளது. தற்போது அந்த வீட்டின் பெரும் பகுதி ஓட்டலாக மாற்றப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் காந்தி படுக்கை அறையாக பயன்படுத்திய அறையும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் அவரது நினைவாக அருங் காட்சியக மாக்கப்பட்டுள்ளது. இந்த இல்லம் கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. டிராவல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜூன் பிரான்காயில் ரியால் இதை திறந்து வைத்தார். காந்தி வாழ்ந்த இந்த "சத்யாகிரக இல்லம்" கடந்த 1907-ம் ஆண்டு கட்டப்பட்டது.
இது தென் ஆப்பிரிக்கா மற்றும் சர்வதேச சுற்றுலா பயணிகளை கவரும் என ஓட்டல் நிர்வாகத்தினர் தெரி விக்கின்றனர். தென் ஆப்பிரிக்காவில் மகாத்மாகாந்தியும், நெல்சன் மண்டேலாவும் அடைக்கப்பட்ட ஜோகன்ஸ்பர்க் பழையகோட்டை சிறைச்சாலையும் நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment