“வியாழன் கிரகத்தில் தண்ணீர்” நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

width="200"


 
வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் வியாழன், இங்கு பல சந்திரன்கள் உள்ளன. எனவே, வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989-ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது.
 
அதில் அங்கு ஐஸ்கட்டி படிவங்கள் ஓரளவு இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக தெரியாததால் அங்கு தண்ணீர் இருப்பது சந்தேகம் என கருதினர். இந்த நிலையில், வியாழன் கிரகத்தில் உள்ள "யூரோப்பா" என்ற சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரிய வந்துள்ளது. "யூரோப்பா"வில் 10 கி.மீட்டர் அளவுக்கு கனமான ஐஸ்கட்டி படிவங்கள் உள்ளன.
 
அவை 3 கி.மீட்டர் ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் நிறுவன தலைவர் பிரிட்னி தெரிவித்துள்ளார்.





0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India