இங்கிலாந்தில் உள்ள டோர்குலே என்ற இடத்தை சேர்ந்தவர் ஆலன் பில்லிஸ் (61). டாக்சி டிரைவரான இவர் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் இறந்தார். தான் இறந்த பிறகு தனது உடலை எகிப்து அரசர்களை போன்று மம்மி வடிவில் உருவாக்கி பரிசோதனைக்கு தானமாக அளிக்க வேண்டும் என விரும்பினார்.
அவரது விருப்பப்படி உடல் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு மருத்துவ மையத்தில் தானமாக வழங்கப்பட்டது. அங்கு அவரது உடல் சிறப்பு ஆபரேசன் செய்து மருந்துகள் தடவப்பட்டு அழுகாத நிலையில் மம்மி போன்று உலர வைக்கப்பட்டது. தற்போது அவரது உடல் முழுமையாக மம்மி ஆகிவிட்டது.
யோர்க் பல்கலைக்கழகத்தின் ரசாயனவியல் நிபுணர் டாக்டர் ஸ்டீபன் பக்லீ இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்தார். 3 மாதங்களில் இந்த சாதனையை அவர் செய்து முடித்தார். 3 ஆயிரம் ஆண்டுகளில் டாக்சி டிரைவர் ஆலன் பில்லிஸ் முதல் மம்மி மனிதர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.


Paris Time


0 comments:
Post a Comment