
வடஅமெரிக்காவைவிட அண்டார்டிகா ஓசோன் மண்டலத்தில் பெரிய ஓட்டை விழுந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுசூழல் மாசு காரணமாக பூமியின் மேற்பரப்பில் உள்ள "ஓசோன்" மண்டலத்தில் மாசு ஏற்பட்டுள்ளது. தற்போது அதில் ஓட்டை விழுந்துள்ளது. எனவே சூரிய கதிர்களின் அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமியில் விழும் வாய்ப்பு உள்ளது. இதனால் பூமியில் வாழும் உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஓசோன் படலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டை பனி படர்ந்து கிடக்கும் அண்டார்டிகா கண்டத்தில் தான் கடந்த 1970-ம் ஆண்டுகளில் முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டது.தேசிய ஓசியானிக் மற்றும் விண்வெளி நிர்வாகம் அனுப்பிய "போய்ஸ்" என்ற செயற்கைகோள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் சிறிய அளவில் விழுந்த ஓட்டை தற்போது பெரிதாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்காவின் "நாசா" விண்வெளி மையத்தின் சார்பில் பூமியை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆரா என்ற செயற்கைகோள் அனுப்பப்பட்டது.
அதன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 75 லட்சம் சதுர கி.மீட்டர் தூரத்துக்கு ஓட்டை விழுந்துள்ளதாக கண்டறியப்பட்டது. தற்போது பெரிய அளவில் உள்ளது. இது வடஅமெரிக்க கண்ட ஓசோன் மண்டலத்தில் விழுந்துள்ள ஓட்டையை விட மிக பெரியதாகும்.
0 comments:
Post a Comment