வாக்கிங் போகலாமா?

width="200"


 
உடற்பயிற்சி என்றாலே பெரும்பாலானவர்கள் சொல்லும் அறிவுரை "நடப்பது" தான். தினமும் அரை மணி நேரம் நடந்தால் போதும், உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்கும், உடல் சுறுசுறுப்படையும், தேவையற்ற கொழுப்பு குறையத் துவங்கும் என்றெல்லாம் மக்கள் பயன்களை அடுக்குவதுண்டு.
 
அறிவுரையைக் கேட்பவர்கள் கேட்க மறந்து போகும் விஷயங்களில் சில எப்படி நடக்கவேண்டும், எத்தனை வேகமாக நடக்க வேண்டும் போன்றவை. உலகெங்கும் பலருக்கும் இருக்கக் கூடிய இந்தக் குழப்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் இப்போது ஒரு ஆராய்ச்சி மூலம் தீர்த்து வைத்திருக்கிறார்கள்.
 
அதாவது நிமிடத்திற்கு சராசரியாக நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பதே அளவான மிதமான உடற்பயிற்சி, இந்த வேகத்தில் தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பது சரியான உடற்பயிற்சி என்கின்றனர் அவர்கள். எதிர்பார்க்கும் பயன் கிடைக்க வேண்டுமெனில் ஆண்களின் நடை வேக விகிதம் நிமிடத்துக்கு 92 அடிகள் முதல் 102 அடிகள் வரை இருக்க வேண்டும் எனவும், பெண்களுக்கு 91 முதல் 115 வரை இருக்க வேண்டும் எனவும் அவர்களுடைய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
 
97 பேரை வைத்து நடத்திய இந்த ஆராய்ச்சி இறுதி முடிவாக, ஆண்களோ, பெண்களோ நிமிடத்துக்கு சுமார் நூறு அடிகள் எடுத்து வைத்து நடப்பது நல்லது எனும் முடிவை எட்டியிருக்கிறது. இந்த ஆராய்ச்சி ஆரோக்கியமான மக்களை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது.
 
ஆரோக்கியம் குறைவானவர்களோ, மிக அதிக எடை கொண்டவர்களோ அதற்கு ஏற்றார்போல் நடையின் வேகத்தை மிதப்படுத்தலாம் என்கிறார். தொடர்ந்த உடற்பயிற்சி எப்போதுமே நல்லது. அதுவும் நீச்சல், நடை போன்றவை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானவை.




0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India