"தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் எலும்புகள் உருவாகின்றன'' என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நன்மைபயக்கும். என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. தற்போது இதனால் புதிய எலும்புகள் உதுவாகுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. உடற் பயிற்சி செய்யாவிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு ஏற்பட்டு நோய் ஏற்படுகிறது.
அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் சக்தி வாய்ந்த ஸ்டெம் செல்களில் உடனடி மாற்றம் நிகழ்ந்து அவை எலும்பாக மாறுகிறது. இதற்கான ஆய்வை அமெரிக்காவில் உள்ள மேக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எலியின் மூலம் மேற்கொண்டனர். டிரெட்மில் என்ற உடற்பயிற்சி சாதானத்தின் மூலம் ஒரு எலிக்கு தொடர்ந்து உடற்பயிற்சி அளித்தனர்.
அந்த எலியின் உடலில் மாற்றம் ஏற்பட்டு எலும்பு உருவானது. அதே நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுத் தாத எலிகளின் உடலில் எலும்புக்கு பதிலாக கூடுதல் கொழுப்பு ஏற்பட்டி ருந்தது. இதன் மூலம் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி உடலில் புதிய எலும்பை உருவாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Paris Time


0 comments:
Post a Comment