மைக்ரோசொப்டின் 25 ஜிபி இலவச மேக நினைவக வசதி



  மேகக்கணனி (Cloud Computing), மேக நினைவகம் (Cloud storage) என்பது தொடர்பில் பல்வேறு செய்திகளை நாம் உங்களுக்கு வழங்கியுள்ளோம்.

குறிப்பாக இலவசமாக வழங்கப்படும் மேக நினைவக வசதி தொடர்பிலும் செய்தி வெளியிட்டிருந்தோம். அவ்வாறு வசதியை வழங்கும் இணையத்தமொன்றே www.cx.com ஆகும்.

இவ்வாறு மேக நினைவக வசதியை மைக்ரோசாப்ட் நிறுவனமும் வழங்கிவருகின்றது. அதுவும் 25 GB இடத்தை இலவசமாகவே வழங்குகின்றது.

இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும் இலகுவாகவும், சிறப்பாகவும் உள்ளது.

அவ்வசதியை வழங்கும் தளம் Skydrive.live.com என்பதாகும். இதனைப் பெறுவதற்கு உங்களிடம் ஹொட்மெயில் கணக்கொன்று இருக்க வேண்டியது அவசியம்.

இத்தளத்திலிருந்தே மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின் Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பெக்கப் (Backup) செய்தும் கொள்ளலாம்.

மேலும் பல வசதிகளை கொண்டுள்ள இத்தளத்தினை பயன்படுத்தி உங்கள் கருத்துகளை எங்களுக்கு வழங்குங்கள்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India