அட்லாண்டிக் கடலில் 240 தொன் வெள்ளியுடன் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்..
இரண்டாம் உலகப் போரின் போது சுமார் 240 தொன் வெள்ளியுடன் ஜேர்மனியப் படைகளின் 'டொபிடோ' தாக்குதலுக்குள்ளாகி அட்லாண்டிக் கடலில் மூழ்கிய பிரித்தானிய கப்பலொன்றின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனமான ஒடிசி அறிவித்துள்ளது.
எஸ்.எஸ். கெயார்சோபா என்ற அக்கப்பலின் சிதைவுகள் அயர்லாந்து கரைப்பகுதியிலிருந்து 300 மைல்கள் தொலைவில் சுமார் 15,510 அடி ஆழத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இக்கப்பலானது 1941 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி ஜேர்மனியப்படையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் அதன் போது இதில் பயணித்த 84 பேர் உயிரிழந்துடன் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்துள்ளார்.
தற்போதைய சந்தைவிலைகளுடன் ஒப்பிடும் போது அவ்வெள்ளியின் மொத்தப் பெறுமது 210 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒடிசி நிறுவனமானது பிரித்தானிய அரசுடனான ஒப்பந்தப்படி கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளியில் 80 வீதமானவற்றை பெற்றுக்கொள்ளுமென்பது குறிப்பிடத்தக்கது.


Paris Time



0 comments:
Post a Comment