ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை...
கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் பூமிக்குள் புதைந்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். கே.எம். ஹீன்பண்டா ( வயது-59) என்பவரே இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.
ஹரிஸ்பத்துவ ஹரங்கஹவ, சியபத்கம என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர், சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சாகசங்களை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று 25 விஷேட நடுவர்கள் குழு ஒன்றின் முன்னிலையில் ஐந்து மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பூமிக்குள் புதைந்திருந்து ஒரு சாதனையை படைத்தார்.
பூமிக்குள் புதைந்திருந்து இது வரை நிகழ்த்தப்பட்ட சாதனை மூன்று மணித்தியாலம் 39 நிமிடங்கள் 12 வினாடிகள் ஆகும். ஆனாலும் இவர் இன்று ஐந்து மணித்தியாலங்கள் புதைந்திருந்து அச் சாதனையை முறியடித்தார். இன்று மாலை இரண்டு மணிக்கு 6 அடி நீளம் 3 அடி அகலம் மற்றும் 3 அடி உயரம் கொண்ட குழியினுள் அவரை உயிருடன் வைத்து, பலகைகளைக் கொண்டு சமாதி போல் செய்யப்பட்ட மண்; திட்டி மேல் தீயைக் கொழுத்தினர்.
ஐந்து மணித்தியாலங்களின் பின்னர் புதை குழியை தோண்டி அவரை மீட்டெடுத்தப்போது அவர் சுகதேகியாக எழும்பி வந்தார்.
0 comments:
Post a Comment