வடமராட்சியில் தங்கப் புதையல் கொள்ளை...
வடமராட்சி கெருடாவில் இல் பாரிய தங்கப் புதையல் ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வடமராட்சி கெருடாவில் பிரதேசத்தில் கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் அதன் போது கிடைத்த பாரிய தங்கப் புதையலொன்றை திருட்டுத்தனமாக எடுத்துச் சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக அப்பகுதிக்கு அண்மையில் நிலத்தை அகழ்ந்து கல்லுடைக்கும் தொழிலில் ஈடுபட்ட மூன்று கூலித் தொழிலாளர்கள், பாரிய பித்தளைக் கிடாரம் போன்ற கொள்கலன;; ஒன்றை மீட்டதாகவும் அதனை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வேடிக்கை பார்க்க முற்பட்ட சமயம் அடித்து விரட்டப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
பின்னர் அவர்கள் அதனை அங்கு நின்ற உழவு இயந்திரத்தில் கல்லுடன் சேர்த்து ஏற்றிச் சென்றுள்ளனர். அதனைக் கண்ட சிறுவர்கள் தெரிவித்த தகவலையடுத்து பிரசேத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் கல்லுடைக்கும் தொழிலாளர்களிடம் இது பற்றி விசாரிக்க முற்பட்டுள்ளனர். ஆயினும் அவர்கள் மழுப்பலான பதில்களையே அளித்துள்ளனர். மேலும் அதுகுறித்து விசாரித்த நபரொருவரைத் தாக்கவும் முற்பட்டுள்ளார்கள்.
அது மாத்திரமன்றி பிரஸ்தாப பித்தளை கொள்கலன் கிடைக்கப் பெற்றதன் பின்பு அத் தொழிலாளர்கள் அப் பகுதியில் கல்லுடைப்பில் ஈடுபடவில்லை என்றும் அவர்களது குடிசைகளில் அவர்களைக் காணவில்லை என்றும் தெரிய வருகின்றது.
அவர்கள் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளனர். அதன் காரணமாக அத்தொழிலாளார்கள் பாரிய தங்கப் புதையல் ஒன்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் மத்தியில் பலமான சந்தேகம் ஒன்று பரவியுள்ளது.


Paris Time


0 comments:
Post a Comment