கடந்த நூற்றாண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், பொது அறிவு திறன் பெண்களிடம் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டது. அந்த விஷயத்தில் ஆண்கள் அறிவாளிகளாக திகழ்ந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. சமீபத்தில் இரு பாலரிடமும் பொது அறிவு திறன் குறித்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் தெரிய வந்துள்ள விவரங்கள் டெய்லி மெயில் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 100 ஆண்டுகளாக ஆண்கள் மற்றும் பெண்களின் அறிவுத்திறன் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. அதே சமயத்தில் அறிவுத்திறன் வளர்ச்சி பெண்களிடம் அதிகமாக உள்ளது. இது நவீனத்தின் விளைவுகள் ஆகும். நவீன உலக சூழலில், நமது மூளை நிறைய விஷயங்களை கிரகிக்கின்றன. இதனால் பொது அறிவுத்திறன் வளர்ந்துள்ளது. பெண்கள் மீதான நவீனத்தின் முழு தாக்கமும், அவர்களை அறிவுத் திறனில் உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
ஒருவரின் அறிவு வளர்ச்சிக்கு மரபணு காரணமில்லை, அது மட்டுமே அறிவை வளர்க்க முடியாது என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நவீனமும், உலக தொடர்புகளும் மீடியா போன்ற பலமான தகவல் தொடர்புகளும் அறிவு வளர்ச்சிக்கு முக்கிய காரணகளாக உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 comments:
Oh Great! Good interesting article Discover World News in Tamil
Post a Comment