சுவீடனை சேர்ந்த பெண் பீட்டர்சன். இவர் கென்யாவில் உள்ள டர் எஸ்சலாம் என்ற இடத்தில் இருந்து ஆம்ஸ்டர்டாமுக்கு பயணம் செய்தார். விமானத்தில் அவருக்கு அருகே 30 வயது நபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
நோய்வாய் பட்டு உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவர் விமானம் நடுவானில் பறந்தபோது பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த பீட்டர்சன் தனக்கு வேறு இருக்கை ஒதுக்கும்படி விமான பணிப்பெண்களிடம் கேட்டு கொண்டார். அனால் வேறு இருக்கை எதுவும் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.
எனவே, அவர் இறந்தவரின் பிணத்தின் அருகில் அமர்ந்து பயணம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. இது அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. பயத்தில் அவரது உடல் வியர்த்தது. இருந்தும் எப்படியோ 10 மணி நேரம் பிணத்துடன் அமர்ந்து பயணம் செய்தார்.
ஆம்ஸ்டர்டாம் வந்து சேர்ந்த அவர் கென்யா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு இ-மெயில் மூலம் புகார் செய்தார். அவரது புகாரை ஏற்று கொண்ட நிறுவனம் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டது. மேலும், விமான டிக்கெட் பாதி பணம் ரூ.75 ஆயிரத்தை திரும்ப வழங்கியது.
0 comments:
Post a Comment