செவ்வாய் கிரகத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அங்கு வடக்கு மற்றும் தெற்கு துருவகங்களில் தண்ணீர் உள்ளது என்றும், மைய பகதி மிகவும் காய்ந்து இருப்பதாகவும் வாஷிங்டனை சேர்ந்த எரிக்ஹாவ்ரி என்ற விஞ்ஞானி தெரிவித்து இருந்தார்.
தற்போது நடைபெற்ற புதிய ஆய்வு மூலம் அதிசயிக்கத்தக்க முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செவ்வாய் கிரகத்தில் மைய பகுதியிலும் பெருமளவில் தண்ணீர் உள்ளது.
அங்கு பூமியில் உள்ள அணை கட்டுகளை போன்று பெருமளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு அங்குள்ள ஏராளமான எரிமலைகள் காரணமாக இருக்கலாம். ஏனெனில் அவை வெடித்து சிதறியபோது செவ்வாய்கிரகத்தின் ஆழமான பகுதியில் இருந்து தண்ணீர் மேலே வந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
0 comments:
Post a Comment