இந்த விமானத்தை ஸஸ்நிட்ஸ் என்ற இடத்தில் உள்ள பண்டேஷ்வர இராணுவ வரலாற்று அருங்காட்சியகத்தின் நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த அருங்காட்சியகத்தின் செய்தித் தொடர்பாளர் ஸெபாஸ்டியன் பங்கெர்ட் கூறுகையில், முதலில் இந்த விமானத்தை Ju 88 ரக விமானம் என்றே பலரும் கருதினர்.
ஆனால் முழு ஆய்வும் நிறைவடைந்த பின்பு இது நால்வர் அமர்ந்து செல்லும் இரண்டு எஞ்சின்களைக் கொண்ட ஜங்கர் 88 என்ற போர் விமான வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. இது பலரும் நினைத்ததை விட இரண்டு மடங்கு பெரியது என்றார்.
பல வாரங்களாக நடந்த அகழ்வாராய்ச்சி 15ஆம் திகதியோடு முடிவடைவதாய் இருந்தது. ஆனால் மனித மிச்சங்கள் அல்லது வீரர்களின் அடையாள வில்லைகள் கிடைக்கின்றனவா என்று தற்போது ஆராய்ந்து வருகின்றனர். இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment