தலைமறைவாக இருந்து வந்த நித்யானந்தா கர்நாடக நீதிமன்றத்தில் சரண்

width="200"


பெங்களூரு அருகே உள்ள பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் உள்ளது. இங்கு கடந்த 7-ந்தேதி நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கைகலப்பு-ரகளை ஏற்பட்டது. இதுதொடர்பாக நித்யானந்தா மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கில் அவரை கைது செய்ய போலீசார் பிடிவாரண்டு பிறப்பித்திருந்தனர். இதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார்.
 
இந்நிலையில், நித்யானந்தா மீதான வழக்கை ரத்து செய்யுமாறு நித்யானந்தா தரப்பில் கோரிக்கை மனு ஒன்று பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த பெங்களூர் உயர்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை மறுத்ததோடு இம்மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெறும் என உத்தரவிட்டது.
 
இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்த நிலையில்,  ராம்நகர அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கோமளா முன்னிலையில் நித்யானந்தா சரணடைந்துள்ளார்.
 
நித்யானந்தா சரணடைந்ததையடுத்து அவரை சிறையில் அடைக்க நீதிபதி கோமளா உத்தரவிட்டார். மேலும் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறும் ஆணையிட்டார். இதையடுத்து ராமநகரம் கிளைச் சிறையில் நித்யானந்தா அடைக்கப்படுகிறார்.
 
முன்னதாக நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தை சோதனையிட்ட போலீசார் பல முக்கிய தகவல்களை கைப்பற்றியது மட்டுமின்றி, 4 அறைகளையும் சீல் வைத்துள்ளனர்.

 




0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India