இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்த வெங்கட் என்ற ரங்கநாதன் என்பவர் மிக உயரமான தென்னை மரம் ஏற நவீன கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.
இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்த வெங்கட் என்ற ரங்கநாதன் என்பவர் மிக உயரமான தென்னை மரம் ஏற நவீன கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து இவர் கருத்து தெரிவிக்கையில், தனது படைப்பை டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த கண்காட்சியில், ஜனாதிபதி முன் பார்வைக்கு வைக்கும் வாய்ப்பு தற்போது இவருக்கு கிடைத்துள்ளது.
மிக உயரமான தென்னை மரத்திலும், விரைவில் ஏறக்கூடிய இந்த நவீன கருவியினைப் பயன்படுத்துவதால் காயம் ஏற்படாமல் பாதுகாப்பான முறையில் செயல்பட முடியும். இக்கருவியின் உதவியால் தற்போது இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் தென்னை, பனை மரங்களில் காய்களை பறிக்கும் பணி நடந்து வருகிறது.
இக்கருவியை கொண்டு சில்வர் ஓக், தேக்கு போன்ற மரங்களில் அமர்ந்தவாறு, கிளைகளை வெட்டலாம். இக்கருவி 11 கி.கி., எடை கொண்டது. 100 கி.கி., வரையுள்ள எடையை தாங்கக் கூடியது. இந்திய மதிப்பின் படி ஏழு ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment